இலங்கையில் நடக்கும் போரில் அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்படுவதையும் மனித உரிமைகள் மீறப்படுவதையும் கண்டித்து எழுதும் பத்திரிகையாளர்கள் தொடந்து தாக்கப்படுகிறார்கள். கடந்த 2006 ஜனவரி மாதம் தொடங்கி இதுவரையில் 16 பத்திரிகையாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக முறையான நீதி விசாரணையோ குற்றவாளிகளை கைது செய்யும் நடவடிக்கையோ இலங்கை அரசால் இதுவரை நடத்தப்படவில்லை. மேலும் பத்திரிகையாளர்கள். பத்திரிகை நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் திடிரென கடத்தப்படுவதும் முறையான காரணம் இல்லாமல் கைது செய்யப்படுவதும் தொடர்ந்து வருகிறது.
இதனையெல்லாம் கண்டித்து சென்னை பத்திரிகையாளர் சங்கம், சென்னை பிரஸ் கிளப் போன்ற அமைப்புகள் எல்லாம் இணைந்து "போருக்கு எதிரான பத்திரிகையாளர்கள்" என்ற கூட்டமைப்பின் பெயரில் சென்னையில் இன்று (ஜனவரி 28)பத்திரிகையாளர் மன்றத்தில் ஆர்பாட்டம் நடத்தினார்கள். இந்த ஆர்பாட்டத்தில் ஏராளமான பத்திரிகையாளர்கள் கலந்து கொண்டார்கள். நாளிதழ்கள்,பருவ இதழ்கள், தொலைக்காட்சி ஊடக செய்தியாளர்கள் புகைப்படக் கலைஞர்கள் என்று பலர் கலந்து கொண்டனர்.
இலங்கையில் கொல்லப்பட்ட பத்திரிகையாளர்கள் பட்டியல் வாசிக்கப்பட்டது. சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த குமாரதுங்கே கொல்லப்படுவதற்கு முன்பு மாரண சாசனமாக அவர் எழுதிய கடைசி தலையங்கம் ஆர்பாட்டத்தில் வாசிக்கப்பட்டது. இலங்கை பத்திரிகையாளர் ஒருவர் அங்கே நாக்கும் அவலங்களை ஆர்பாட்டத்தில் விவரித்தார். இலங்கை அரசுக்கும் எதிராக கோஷங்கள் எழுப்பபட்டன. நக்கீரன் கோபால், சின்னகுத்தூசி போன்ற பத்திரிகையாளர்கள் ஆர்பாட்டத்தில் பங்கெடுத்தனர். முன்னதாக இலங்கையில் கொல்லப்பட்ட பத்திரிகையாளர்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.
"சுதந்திர எண்ணங்களுடன் போரை விமர்சிக்கும் பத்திரிகையாளர்கள் படுகொலை செய்யப்படுவதை கண்டிக்கிறோம். இதுவரை நடந்த பத்திரிகையாளர்கள் கொலைகள், கடத்தல்கள், கைதுகள் குறித்து சர்வேதேச அளவிலான அமைப்பை கொண்டு வெளிப்படையான விசாரணை நடத்த வேண்டும்.
உள்நாட்டு போரை காரணமாகச் சொல்லி அப்பாவி பொதுமக்கள், குழந்தைகள், பெண்கள் மீது குண்டுகள் வீசி படுகொலை செய்வதை நிறுத்த வேண்டும். உடனடியாக போர் நிறுத்தம் செய்ய வேண்டும்." என்ற இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Download Eating the Alphabet
-
Buy Eating the Alphabet.
[image: Eating the Alphabet]
Eating the Alphabetby Lois Ehlert
Category: Book
Binding: Board book
Author:
Number of Pages:
Downl...
5 ஆண்டுகள் முன்பு
0 கருத்துகள்:
கருத்துரையிடுக