
இட ஒதுக்கீட்டையும், வி.பி,சிங்கையும் கொச்சைப்படுத்தியதாக சொல்லி "இந்தியா டுடே" பத்திரிகைக்கு எதிராக போராட்டம் நடத்தினார்கள் திராவிடர் கழகத்தினர். மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள இந்தியாடுடே அலுவலகத்தின் முன்பு திராவிடர் கழக இளைஞரணி மாநில துணைச் செயலாளர் தமிழ் சாக்ரடீசு தலைமயில் 50-க்கும் மேற்பட்ட இளைஞரணியினர் "இந்தியா டுடே" பத்திரிகைக்கு எதிராக குரல்கள் எழுப்பி அந்த பத்திரிகையை தீயிட்டு கொளுத்தினர். இந்த போராட்டத்தில் ஈடுபட்டோரைக் கைது செய்து பிறகு விடுவித்தது போலீஸ்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக