சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு அரசு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் சார்பில் சுற்றுலா பொருட்காட்சி நடப்பது வழக்கம். பேரறிஞர் அண்ணாவின் நூற்றாண்டு விழாவினை சிறப்பிக்கும் வகையில் இந்த ஆண்டு பொருட்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. “இக்கால சூழல் மாற்றத்தின் சவால்களை சமாளிப்பது சுற்றுலா” என்பது இந்த பொருட்காட்சியின் கருப்பொருள் ஆகும்.
இந்த பொருட்காட்சியில் 26 மாநில அரசுத்துறை நிறுவனங்களும், 12 அரசுத் துறை நிறுவனங்களும், 3 மத்திய அரசு நிறுவனங்களும் பிற மாநில அரசுத் துறை என மொத்தம் 42 அரசு அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் 115 கடைகளும், 26 விற்பனை அரங்குகளும் தனியார் மூலம் அமைக்கப்பட்டுள்ளன. மதுரை திருமலை நாயக்கர் மஉறால் வடிவமைப்பு பொருட்காட்சியின் முகப்பாக இந்த ஆண்டு அமைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு சுற்றுலாப் பொருட்காட்சி மூலம் 1.51 கோடி வருமானம் கிடைத்தது. இந்த ஆண்டு தனியார் நிறுவனத்துடன் இணைந்துள்ளதன் மூலம் ரூ. 2.20 கோடி லாபம் முன்பாகவே பெறப்பட்டுவிட்டது. நகர்ப்புற மக்கள் கிராமச் சூழ்நிலையை உணர்ந்து அனுபவிக்கும் வகையில் சிற்றூர் சுற்றுலா எனப்படும் சிறப்பு அரங்கு 25 ஆயிரம் சதுர அடியில் உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் மக்களை மகிழ்விக்க கலை நிகழ்ச்சிகள் நடத்தும் வகையில் மாமல்லபுரத்தின் கண்கவர் இடமான கடற்கரை கோயில் அமைப்பும் அண்ணா திறந்தவெளி கலையரங்கம் அமைக்கப்பட்டிருக்கிறது.
ஒரிசா, குஜராத், சிக்கிம், மிஜோரம், ராஜஸ்தான், இமாச்சல பிரதேசம், அஸ்ஸாம், ஜார்க்கண்ட், மணிப்பூர், அருணாசல பிரதேசம், புதுச்சேரி மற்றும் நாகலாந்து மாநில கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் அம்மாநில மக்களின் கலாச்சாரத்தை பறைசாற்றும் வகையில் இந்தாண்டு முதன்முறையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், நடன, நாட்டிய கலை நிகழ்ச்சிகள், பட்டி மன்றம், பாட்டு மன்றம் மற்றும் திரைப்படப் புகழ் கலைஞர்களின் பல்சுவை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள். மேலும் மலையேற்றம் சறுக்கு விளையாட்டு, மதில் ஏற்றம் பஞ்ச் ரிங் போன்ற வீர சாகச விளையாட்டுகளும் இந்தியாவிலேயே முதன் முறையாக ஹாட் ஏர் பலூன், பஞ்ச் ஜம்பிங் விளையாட்டுகளும் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் அமர்நாத் பனி லிங்கம் போன்ற அமைப்பு காணவரும் ஆன்மீக மக்களை பரவசப்படுத்தும்.
இதுமட்டுமல்லாமல் மீன்காட்சி, 40 வகையான கேளிக்கை விளையாட்டுகள் மற்றும் தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக பம்பர் ஜீப்,ஹனிபீ, கேப்ஸுல் போன்ற புதுமையான விளையாட்டுகள் அமைக்கப்பட்டு வருகின்றன. தரமான முறையில் தயாரிக்கப்பட்ட அறுசுவை உணவு வகைகள், செட்டி நாடு உணவு வகைகள் தமிழ்நாடு உணவகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பள்ளி கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு சலுகை கட்ட ணமாக ரூ. 5ம் சிறுவர்களுக்கு ரூ 5ம் பெரியவர்களுக்கு ரூ. 10 ம் நுழைவுக் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த பொருட்காட்சி அலுவலக நாட்களில் மாலை 3 மணி முதல் இரவு 10 மணி வரையும் ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 10 மணி வரையும் செயல்படும். நுழைவு சீட்டிற்கு குலுக்கல் முறையில் பரிசு வழங்கப்படும்.
இப்பொருட்காட்சியின் மூலம் சுமார் 5000 பேருக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கிறது. கடந்த 2001 ஆம் ஆண்டு 10.91 லட்சம் பார்வையாளர்கள் வருகை தந்ததன் மூலம் ரூ. 57.55 லட்சம் வருமானம் கிடைத்தது. தொடர்ந்து வருமானத்தில் வளர்ச்சி கண்டு கடந்த முறை 14.45 லட்சம் பார்வையாளர்கள் மூலம் ரூ. 1.51 கோடி வருமானம் பெற்றுள்ளது.
இப்பொழுது நடைபெறும் சுற்றுலா நுhற்றாண்டு நிறைவு 35வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சியில் 20 லட்சம் பார்வையாளர்கள் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. வெளிநாட்டுப் பயணிகள் வருகையில் 2006 ஆம் ஆண்டு 4வது இடத்தில் இருந்த தமிழ்நாடு 2007ல் மூன்றாவது இடத்திற்கு உயர்ந்துள்ளது என்பது தமிழ்நாட்டில் சுற்றுலாத் துறையின் முக்கியத்துவத்தை பறைசாற்றுகிறது. உடனே சுற்றுலா பொருட்காட்சிக்கு கிளம்பிவிட வேண்டாம். பணிகள் இன்னும் கொஞ்சம் பாக்கி இருப்பதால் பத்து பதினைந்து நாட்கள் கழித்து சென்றால் முழுமையாக அனுபவிக்கலாம்.
Download Eating the Alphabet
-
Buy Eating the Alphabet.
[image: Eating the Alphabet]
Eating the Alphabetby Lois Ehlert
Category: Book
Binding: Board book
Author:
Number of Pages:
Downl...
5 ஆண்டுகள் முன்பு
0 கருத்துகள்:
கருத்துரையிடுக