பிரதமரை சந்தித்தது அனைத்து கட்சி குழு



பிரதமர் மன்மோகன் சிங்கை இன்று (டிசம்பர் 4) புதுடெல்லி பிரதமர் இல்லத்தில், தமிழக முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் அனைத்துக் கட்சித் தலைவர்கள் சந்தித்து, இலங்கையில் அப்பாவித் தமிழ் மக்கள் கொல்லப்படுவதை தடுக்க உடனடியாக போர் நிறுத்தம் ஏற்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கோரிக்கை மனுவினை அளித்தனர். அப்போது தமிழக நிதி அமைச்சர் அன்பழகன், மத்திய கப்பல், சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் டி.ஆர். பாலு மற்றும் அனைத்துக் கட்சித் தலைவர்கள் கே.வி. தங்கபாலு (தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர்), டாக்டர் ராமதாஸ் (பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனத் தலைவர்), கோ.க. மணி (பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர்), டி. சுதர்சனம், (காங்கிரஸ் சட்டமன்ற கட்சித் தலைவர்), தா. பாண்டியன் (மாநிலச் செயலாளர் - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி), கீ.வீரமணி (திராவிடர் கழகத் தலைவர்), காதர் மைதீன் (தமிழ்நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக்), அப்துல் பாசித்,(தமிழ்நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக்), திருமாவளவன் (விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர்), பூவை ஜெகன்மூர்த்தி (புரட்சி பாரதம் கட்சி), எல். கணேசன் (ம.தி.மு.க.), ஆர்.எம். வீரப்பன் (எம்.ஜி.ஆர். கழகம்), ஹைதர் அலி (தமிழக முஸ்லிம் முன்னேற்றக் கழகம்), ராதிகா சரத்குமார் (சமத்துவ மக்கள் கட்சி), பேராயர் எஸ்ரா சற்குணம் (இந்திய சமூக நீதி இயக்கம்), திருப்பூர் அல்தாப் (தமிழ் மாநில தேசிய லீக்), பி.வி. கதிரவன் (அகில இந்திய பார்வர்டு பிளாக்), விஜய டி. ராஜேந்தர் (இலட்சிய திராவிட முன்னேற்றக் கழகம்), டாக்டர். கிருஷ்ணசாமி (புதிய தமிழகம்), ஜெகத்ரட்சகன் (ஜனநாயக முன்னேற்றக் கழகம்), கே. செல்லமுத்து (உழவர் உழைப்பாளர் கட்சி) ஆகியோர் உடன் இருந்தனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக