கருணாநிதியை சந்தித்தார் எஸ்.வி. சேக‌ர்



மயிலாப்பூர் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வும் நடிகருமான எஸ்.வி.சேகர் இன்று (டிசம்பர்8)கோபாலபுரத்தில் முதல்வர் கருணாநிதியை சந்தித்தார். 6வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவிற்கு தமிழக அரசின் சார்பில் நிதி உதவி கேட்டு முதல்வர் கருணாநிதியிடம் சில வாரங்களுக்கு முன்பு கோரிக்கை வைத்திருந்தார் சேகர். அவரின் கோரிக்கையை ஏற்று 25 லட்சம் ரூபாயை அரசு ஒதுக்கீடு செய்திருக்கிறது. அதற்காக‌ முதல்வரை சந்தித்து நன்றி தெரிவித்திருக்கிறார் எஸ்.வி. சேகர்.சர்வதேச திரைப்பட விழா குழுவின் துணைத் தலைவராக இருக்கும் சேகருடன் இயக்குநர் தங்கராஜ் உதவி இயக்குநர் சீனிவாசன் ஆகியோரும் முதல்வரை சந்தித்தனர்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக