அனைத்துக் கட்சி குழுவில் இடம்பெறுபவர்கள்

இல‌ங்கை பிர‌ச்னை தொட‌ர்பாக‌ நாளை (டிச‌ம்ப‌ர் 4)பிரத‌ம‌ர் ம‌ன்மோக‌ன் சிங்கை முத‌ல்வ‌ர் க‌ருணாநிதி த‌லைமையில் ச‌ந்திக்க‌ப் போகும் அனைத்துக் க‌ட்சி குழுவில் இட‌ம்பெறுப‌வ‌ர்க‌ள் ப‌ட்டிய‌ல் இது. காங்கிரஸ் சார்பில் தங்கபாலு, சுதர்சனம்.பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் டாக்டர் ராமதாஸ், கோ.க.மணி.போட்டி ம.தி.மு.க. சார்பில் எல்.கணேசன். தமிழ்நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சார்பில் கே.எம்.காதர் மொய்தீன், அப்துல் பாசித். விடுதலை சிறுத்தைகள் சார்பில் திருமாவளவன். திராவிடர் கழகம் சார்பில் கி.வீரமணி. புரட்சி பாரதம் சார்பில் பூவை ஜெகன் மூர்த்தி. தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் சார்பில் எஸ்.ஹைதர் அலி. தமிழ் மாநில தேசிய லீக் சார்பில் திருப்பூர் அல்தாப். எம்.ஜி.ஆர். கழகம் சார்பில் ஆர்.எம். வீரப்பன். அகில இந்திய பார்வர்டு பிளாக் சார்பில் கதிரவன். உழவர் உழைப்பாளர் கட்சி சார்பில் கு.செல்லமுத்து. புதிய தமிழகம் சார்பில் கிருஷ்ணசாமி. இந்திய சமூக நீதி இயக்கம் சார்பில் பேராயர் எஸ்றா சற்குணம். இலட்சிய திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் விஜய டி.ராஜேந்தர். ச‌ம‌த்துவ‌ ம‌க்க‌ள் க‌ட்சி சார்பில் ந‌டிகை ராதிகா. ஜ‌ன‌நாய‌க‌ முன்னேற்ற‌ க‌ழ‌க‌ம் சார்பில் ஜெக‌த்ர‌ட்ச‌க‌ன் ஆகியோர் க‌ல‌ந்து கொள்கிறார்க‌ள்.

அ.தி.மு.க‌. இர‌ண்டு க‌ம்யூனிஸ்ட் க‌ட்சிக‌ள், பி.ஜே.பி., தே.மு.தி.க‌., ம‌.தி.மு.க‌. போன்ற‌ க‌ட்சிக‌ள் இந்த‌ ச‌ந்திப்பை புற‌க்க‌ணித்துவிட்ட‌ன‌.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக